வசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு அதிமுகவில் சீட் வழங்க முடியாது! : ராஜேந்திர பாலாஜி

அதிமுகவில் வசதி வாய்ப்பில்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்க கூடாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், திமுக அழிந்து வருவதாகவும் உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்க கூட அந்த கட்சியில் ஆள் இல்லை எனவும் விமர்சித்தார்.

மேலும், வசதி வாய்ப்பு இல்லாதவருக்கும், வயதானவர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பளிக்க கூடாது எனவும்; இது கம்ப்யூட்டர் காலம் என்பதால் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தினார்.

இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் அதிமுக பக்கம் உள்ளனர் எனவும்; அவர்கள் அதிமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே