உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.ஏ.போப்டே

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே என அழைக்கப்படும் சரத் அரவிந்த் போப்டே நாளை பதவியேற்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.

இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நாளை பதவி ஏற்கிறார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் எஸ்.ஏ.போப்டே தனது பதவிக் காலம் முடியும் வரை அதாவது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பதவியில் நீடிப்பார்.

  • 1956 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பிறந்த எஸ்.ஏ.போப்டே சுமார் 21 ஆண்டுகள் தேர்ந்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.
  • 2000 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • 2012 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,
  • 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் அண்மையில் தீர்ப்பு வெளியான அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே