பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு வைத்த கோரிக்கை..!!

சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் நரம்பியல் சிகிச்சைக்காகபரோலில் வந்து சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

பேரறிவாளனின் விடுதலைக்கு போராடி வரும் அவரது தாய் அற்புதம்மாள் தற்போது முதலமைச்சரிடம் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் .

இந்நிலையில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், “சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர். மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடரவேண்டியுள்ளது. இதனை குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்க கோரி 10ம்தேதி மனு அனுப்பியுள்ளேன்.

சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும் மரணங்களும் மிகுந்த அச்சத்தை தருகிறது.

ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை மருத்துவர்கள் ஏற்கனவே அறிக்கை தந்துள்ளனர்.

மேலும் அறிவுக்கு தடைபட்டுள்ள மருத்துவத்தை தொடர உச்ச நீதிமன்றம் 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7ஆம்தேதி உத்தரவிட்டுள்ளது.

எனவே மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுகொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே