சூரரைப் போற்று சாதனை – IMDB தரவரிசையில் உலகளவில் 3-ம் இடம்..!!

சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐஎம்டிபி தரவரிசையில் உலகளவில் 3-ம் இடம் கிடைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் கடந்த வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்தார்.

இசை – ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி. படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா தகவல்களை உள்ளடக்கிய புகழ்பெற்ற இணையத்தளம் ஐஎம்டிபி. இதில் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரைப் போற்று படம் 3-ம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.

9.1 புள்ளிகளுடன் ஷஷாங்க் ரிடம்ப்ஷன் (9.3), காட்ஃபாதர் (9.2) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

உலகளவிலான 1000 படங்களின் தரவரிசையில் முதல் 60 இடங்களில் நான்கு இந்தியப் படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த நான்கில் முதல் மூன்று இடங்களைத் தமிழ்ப் படங்கள் பிடித்துள்ளன.

34-வது இடத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசனும் (8.5) 58-வது இடத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதாவும் (8.4) 60-வது இடத்தில் ஆமிர் கான் நடித்த டங்கலும் (8.4) இடம்பெற்றுள்ளன.

ஐஎம்டிபி தரவரிசை: முதல் 60 இடங்களில் இந்தியப் படங்கள்

3. சூரரைப் போற்று
34. ராட்சசன்
58. விக்ரம் வேதா
60. டங்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே