மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து ஆளும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது : கனிமொழி

குடியுரிமை திருத்த சட்டம் எனும் பெயரில் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் சென்னை காமராஜர் காலனியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திமுக எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏ ஜெ அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின்போது விவசாயம் மற்றும் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கஷ்டப்படுவது தொடர்பான பாடல்களுக்கு மாணவிகள் நடனம் ஆடினர்.

பின்னர் பேசிய கனிமொழி, மத்திய அரசு மக்களை பிரித்து ஆள முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே