தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2 முறையாக ஆட்சியை கைவிட்ட திமுக, இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறது.

தேர்தலை எதிர்நோக்கி திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

முதற்கட்டமாக விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பேரில் திமுக சார்பில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

அதை தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், திமுக எம்.பி கனிமொழியும் நடத்தி வருகிறார்.

இரண்டாவதாக கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க ஸ்டாலின், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு தொகுதியாக சென்ற பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பிரச்சாரத்தின் போது மக்களின் குறைகளை மனுக்களாக பெறும் மு.க ஸ்டாலின், முதல்வராக பதவியேற்ற பிறகு போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மனுக்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருக்கிறார்.

இந்த நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் 11ஆவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்று வரும் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் மாநில மாநாட்டை வீரர்களின் கோட்டமாம் திருச்சியில் நடத்த இருக்கிறோம்.

இந்த அறிவிப்பை தேனி கூட்டத்தில் அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன் என்று அதிரடியாக பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே