பிகில் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிப்பு

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி, 20 லட்சம் லைக்குகளை தாண்டி உள்ள நிலையில், படத்தின் சென்சார் நடவடிக்கைகள் நிறைவடைந்து, பெரியவர்கள் துணையுடன் குழந்தைகள் பார்க்கலாம் என்பதை குறிக்கும் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே