ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் வெளியாக இருப்பதாகவும், அதன் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
அனிருத் அறிவித்துள்ள நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசன் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.