கீழடியில் கிடைத்த பொருட்களை காண பொதுமக்கள் ஆர்வம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களை காண பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இன்று விடுமுறை தினம் என்பதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்துக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே