டெங்கு கொசு ஒழிப்புப் பணி – எம்.ஆர்.விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மாணவ மாணவிகளுடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கரூர் நகராட்சியில் நாள்தோறும் ஒவ்வொரு பகுதிகளாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வெங்கமேடு அண்ணா காரணியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றதோடு, பள்ளி மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது திடீரென அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அந்த பணிகளை ஆய்வு செய்ததோடு மாணவிகளுடன் இணைந்து தாமும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு நிலவேம்பு குடிநீரையும் விநியோகித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே