பிரதமரே வன்முறையின் மீது நம்பிக்கை கொண்டவர் – ராகுல் காந்தி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் 3 நாள் பயணமாக முகாமிட்டுள்ள ராகுல்காந்தி சுல்தான் பத்தேரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அப்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் வெறுப்புணர்ச்சி பரப்பு படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு அவர்களது நிலங்கள் பறிக்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

நாட்டை ஆட்சி செய்பவர் வன்முறையின் மீது நம்பிக்கை கொண்டவராக இருப்பதாலேயே இத்தகைய வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே