கடந்த ஜூலை மாதம் நடந்த டிஎன்பிஎல் தொடரில் 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற தூத்துக்குடி – மதுரை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது 225 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ-ன் ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி, மதுரை அணிகளை தகுதி நீக்கம் செய்ய பிசிசிஐ உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.