கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் பாஜக பிரமுகர் குஷ்பு..!!

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் கடந்தாண்டு இந்தியாவிலும் அதிகரித்தது.

இதனால் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

தமிழகத்தில் நடிகர் கமல் ஹாசன், ராதிகா சரத்குமார், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, ‘சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.

எனது குடும்பத்தினரை கவனித்துக் கொள்கிறேன், அதோடு தினமும் ஆயிரக்கணக்கானவர்களை சந்திக்கிறேன். மற்றவர்களை கவனித்துக் கொள்ள நான் நலமாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே