உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது என அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஓர் உலக மொழி ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படுவதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழ் தமிழக வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் கற்பிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
ஹிந்தி மொழிக்கு ஒதுக்கப்படும் நிதி தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.