கொசுமூரு மஸ்தான்வாலி தர்காவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பிரார்த்தனை…!

ஆந்திர மாநிலம் நெல்லூர் தர்காவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அருகே உள்ள, கொசுமூரு மஸ்தான் வாலி தர்காவில் மகா உற்சவம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். 

கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தர்காவில் வழிபாடு மேற்கொள்ள வருகை புரிந்தார்.

அவருக்கு மேளதாளங்கள் முழங்க, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தொடர்ந்து தர்காவில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.

ஏ.ஆர். ரஹ்மானை காண ஏராளமான பக்தர்கள் கூட்டம் திரண்டதால், அவரை பாதுகாவலர்கள் மற்றும் போலீசார்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே