புதிய திட்டம் நாட்டின் வரிவசூல் கட்டமைப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி பேச்சு!! (VIDEO)

நாட்டில் இயங்கும் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் போக்கு இன்று ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வரி செலுத்தி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் புதிய திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வெளிப்படையான வரி விதிப்பு – நேர்மையாளரை மதித்தல் என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரி அதிகாரிகள், பல்வேறு வர்த்தக அமைப்பினர் பங்கேற்றுள்ளனர். அதன்பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “நேர்மையை கவுரவிக்கும் வகையில், புதிய வரிவிதிப்பு முறை அமைந்துள்ளது.

நேர்மையாக வரி செலுத்துவோர் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்என கூறினார்.

இது நாட்டு மக்களின் வாழ்க்கையிலிருந்து அரசின் தலையீட்டை குறைப்பதற்கான ஒரு பெரிய படியாகும். இது புதிய இந்தியாவின் புதிய நிர்வாக மாதிரியாகும்.

கடமையை மிக முக்கியமாக வைத்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். சீர்திருத்தங்களுக்கான சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறியுள்ளன. மேலும், முகநூல் முறையீடு செய்வதற்கான வசதி செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ” வரி செலுத்துபவர்கள் ரீஃபண்ட் பெறுவதற்கான வழிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. புதிய திட்டம் வரி முறை வெளிப்படைத்தன்மை கொண்டதாகும் என தெரிவித்தார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே