ஐ.சி.எம்.ஆர் மூத்த விஞ்ஞானிக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 190535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 91819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பல்வேறு தளர்வுகளுடன் இன்று தொடங்கி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமையகத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அலுவலகம் உடனடியாக மூடப்பட்டது. அலுவலகத்தல் சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது.

அதுமட்டுமல்லாமல் மேற்கண்ட பணிகள் நடைபெற உள்ளதால் நாளையும் நாளை மறுநாளும் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டோர் மட்டுமே அலுவலகத்திற்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே