#EIA2020draft : சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: ராகுல் காந்தி..!!

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என எம்.பி.ராகுல் காந்தி வேண்டுகோள் வைத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், “இயற்கையை நாம் பாதுகாத்தால் தான் இயற்கை நம்மை பாதுகாக்கும்.

சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020- ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே