நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடர் பிற்பகலில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று பரவலுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
18 நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.
இதனால் நாடாளுமன்ற அவைகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, மக்களவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, கூட்டத்தொடரின் முதல்நாளான செப்டம்பர் 14 ஆம் தேதி மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும்; மற்ற நாள்களில் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.