மருத்துவர் கஃபீல் கானை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு… மதுரா சிறையிலிருந்து நள்ளிரவில் விடுவிப்பு

கடந்தாண்டு டிசம்பர் 10ம் தேதி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் கஃபீல் கான் பங்கேற்று பேசினார்.

இரு சமூகத்துக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார் என்று கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடந்த ஜனவரியில் கஃபீல் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கஃபீல் கானின் உறவினர் நுஷாத் பர்வீன் என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், கஃபீல் கான் ஒற்றுமையை வளர்க்கும் வகையில்தான் பேசினார் என்று கூறி, ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 2017-ல் அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி பல குழந்தைகளை கபீல் கான் காப்பாற்றிய நிலையில், அவர் அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே