மல்யுத்த விளையாட்டிற்கு முக்கியத்துவம் வேண்டும் : மல்யுத்த வீரர்கள் கோரிக்கை

மல்யுத்த விளையாட்டிற்கு அரசு பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென கள்ளக்குறிச்சியை சேர்ந்த மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டுகளில் கிரிக்கெட், சதுரங்கம், கபடி, டென்னிஸ், ஹாக்கி போன்றவற்றைகளை தாண்டி மல்யுத்த விளையாட்டு தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் பிரபலமடையாத நிலையில் உள்ளது.

இந்த விளையாட்டில் ஈடுபடும் வீரர்களின் எண்ணிக்கை, மற்ற விளையாட்டுகளை காட்டிலும் குறைவு என்று கள்ளக்குறிச்சியை சேர்ந்த மல்யுத்த வீரர் சுரேஷ் கூறினார்.

கடந்த ஒராண்டாக மல்யுத்த விளையாட்டை கற்றுக் கொண்டு தெலங்கானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் சுரேஷ்.

தமக்கு முறையாக ஆசிரியர்கள் இல்லை என்றும், மல்யுத்தம் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதே நேரத்தில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்த பின் இலவசமாக மல்யுத்த பயிற்சியை அளித்து வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மல்யுத்த போட்டியில் கள்ளக்குறிச்சி அரசு பள்ளி மாணவர்கள் 26 பேர் கலந்து கொண்டு இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளை பெற்றுள்ளனர்.

தற்போது மாநில அளவிலான மல்யுத்த போட்டிக்கு தீவிர பயிற்சி எடுத்து கொண்டு இருப்பதாக கூறுகின்றனர் இந்த மாணவர்கள்.

மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் மல்யுத்த விளையாட்டிற்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், முறையான பயிற்சியாளர் மற்றும் உதவிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே