சட்டப்படி நான் டப்பிங் யூனியன் மெம்பர் : சின்மயி

பிப்ரவரி 15ல் நடக்க இருக்கும் டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிட பாடகி சின்மயி வேட்புமனுத்தாக்கல் செய்ய வருகை தந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

டப்பிங் யூனியன் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் ராமராஜ்யம் அணி சார்பில் பாடகி சின்மயி போட்டியிடுகிறார்.

இதற்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள டப்பிங் யூனியனில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

ஆனால் உறுப்பினராக இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என கூறி யூனியன் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டப்பிங் யூனியனில் தன்னை நீக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார்.

இருந்தும் தன்னுடைய பெயர் டப்பிங் யூனியனில் சேர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

சந்தா கட்டவில்லை எனக் கூறி சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து ராதாரவி நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே