கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டண வசூலை ஏற்கக்கோருவது பற்றி தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு நடப்பு கல்வியாண்டுக்கான பாடப்பகுதிகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக பல புகார்கள் எழுந்து வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும் புகார்கள் எழுகின்றன.

இதனிடையே தனியார் கல்வி நிறுவனங்களில் தவணை முறையாக அபராதம் வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

அந்த உத்தரவும் முறையாக பின்பற்றப்படவில்லை.

இந்த நிலையில், தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானத்தை வருமான வரித்துறை தணிக்கை செய்து கட்டணத்தை குறைக்க கோரி அகில இந்திய தனியார் கல்லூரி பேராசிரியர், ஊழியர் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கைகளையும் அரசே ஏற்கக்கோருவது தொடர்பாகவும், கல்விக் கட்டணத்தை குறைப்பது குறித்தும் அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே