அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் 1000 ரூபாய் ரொக்கம் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி, நாளை முதல் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக 1000 ரூபாய் விநியோகிக்கப்படும்.
யார், யார் எப்போது 1000 ரூபாய் பெறலாம் என்ற விவரம் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
அனைவரும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதத்தில் தினமும் 70 முதல் 100 ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே பணம் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்து.
ரொக்கப் பணத்துடன் இந்த மாதத்திற்கான சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மின்னணு குடும்ப அட்டையில் பெயா் உள்ள உறுப்பினா்கள் யாா் வந்தாலும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
இதில் சுமார் 88 லட்சத்து 29, 000 ரேஷன் அட்டைகளுக்கு 1000 ரூபாய் வழங்குவதற்காக சுமார் 1,882 கோடி ரூபாயை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.