வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்திருந்தால் தப்லீக் மாநாடு குறித்த குழப்பம் ஏற்பட்டிருக்காது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
இது தொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், “ஃபிப்ரவரி 1 வாக்கில் வெளிநாட்டவர்கள் இந்தியா வருவதற்குத் தடை விதித்திருந்தால், இந்தியா திரும்பும் இந்தியர்கள் 14 நாட்களுக்கு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த தப்லீக் மாநாடு குழப்பம் ஏற்பட்டிருக்காது.
ஏன் இந்தத் தடை தாமதிக்கப்பட்டது?” என்று கருத்து தெரிவித்துள்ளார்.