தேவர் சிலை தங்க கவசம் மதுரை கொண்டு செல்ல பட்டது

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு வங்கியில் இருந்து கொண்டுவரப்பட்ட தேவர் சிலை தங்கக்கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிகழ்ச்சிக்காக மதுரையில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்தை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி தேவர் நினைவாலய பொறுப்பாளர் இடம் ஒப்படைத்தார்.

தற்போது குருபூஜை விழா நிறைவு பெற்றதையடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் வங்கி லாக்கருக்கு கொண்டு செல்லப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே