கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி என்ற 45 வயது சர்வேயர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து உடன் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலருக்கும், கிராம உதவியாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை 5,000த்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் 5883 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53481 ஆக உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 232618 பேர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களில் நேற்று 118 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,808 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.