இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இரு அணிகளும் பங்கேற்கும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.
இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
வலைபயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், ரோஹித் ஷர்மா இப்போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் நிலவிய நிலையில், அவர் குணமடைந்து விட்டதாகவும் போட்டியில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிராக இதுவரை 8 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி, அவை அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி இன்று களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.