கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்

கேரள மாநிலம் காசர்கோட்டில் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய முதல் நபருக்கு மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கைதட்டி உற்சாகமளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட முன்னணி மாநிலங்களில் கேரளமும் ஒன்று.

அங்கு காசர்கோட் மாவட்டத்தில் மட்டுமே அதிகபட்சமாக 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக கேரளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் கண்ணூர். அங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 49.

இந்நிலையில், காசர்கோட் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து முதல் நபர் ஒருவர் குணமடைந்துள்ளார். 

முழுமையாக குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது மருத்துவ ஊழியர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உள்ளிட்டோர் அவரை கைதட்டி உற்சாகத்துடன் அனுப்பி வைத்தனர்.

இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே