ஜல்லிக்கட்டை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு குறித்து மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த குறுந்தகடுகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
ஜல்லிக்கட்டுப் போட்டியைப் போல் சேவல் சண்டைக்கும் அனுமதி வழங்க முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.