தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 485 ஆக உயர்வு – பீலா ராஜேஷ்

கடந்த24 மணிநேரத்தில் இந்தியாவில் 601  பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 12பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 53 வயது பெண் உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து, தமிழகம் 412 கொரோனா பாதிப்புகளுடன் கொரோனா பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே