கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் உரையாடியுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே கரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவிலும் கரோனா வைரஸுக்கு ஏராளமானோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது,
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி வாயிலாக விரிவாக உரையாடினேன். இந்த பேச்சுவார்த்தை நல்ல வகையில் அமைந்தது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ள இருநாடுகளும் கூட்டாக முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா | அமெரிக்கா | |
பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை | 3,082 | 2,93,539 |
பலியானோரின் எண்ணிக்கை | 86 | 7,896 |
குணமடைந்தோரின் எண்ணிக்கை | 229 | 14,436 |