இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இதையொட்டி இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தத் தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் விராட் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் உள்ளிட்டோர் வலுவான நிலையில் உள்ளனர்.
காயத்தில் இருந்து மீண்ட இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பித் பும்ரா, நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.
இலங்கை அணியில் கேப்டன் லசித் மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.
தொடரில் முதல் வெற்றியைப் பெற இரண்டு அணி வீரர்களும் முழுத் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இதனிடையே போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.