நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தை பார்த்திபன் இயக்கி அவரே நடித்தார்.
இந்த படத்திற்கு பரவலான பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்வது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ஒத்த செருப்பு திரைப்படத்தை ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை வைத்து இயக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நவாசுதீன் சித்திக்குடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.