பழைய செல்போன்கள் மூலம் கோலியின் உருவப்படத்தை உருவாக்கி அசத்தல்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ரசிகர் ஒருவர், செல்போன் உதிரி பாகங்களைக்கொண்டு கோலியின் உருவ மாதிரியை வடிவமைத்துள்ளார்.

கவுகாத்தியைச் சேர்ந்த கோலியின் ரசிகர் ஒருவர், கோலியின் உருவ மாதிரியை வித்தியாசமாக வடிவமைக்க முயற்சித்துள்ளார்.

அந்த வகையில் பயன்பாட்டில் இல்லாத பழைய செல்போன்களின் உதிரி பாகங்களை அட்டையில் நேர்த்தியாக அடுக்கியும் உருவத்திற்கு ஏற்றாற்போல பொருத்தியும், கோலியின் உருவ மாதிரியை வடிவமைத்துள்ளார்.

தனது ரசிகர் வடிவமைத்த படைப்பைக் கண்டுகளித்த கோலி அதில் தனது கையொப்பத்தை இட்டு ரசிகரை பாராட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே