உத்தரப்பிரதேச மாநிலத்தில் முட்டைகள் சாப்பிடும் போட்டியின் போது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சுபாஷ் யாதவ் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றிருக்கிறார்.
அப்பொழுது ஒருவர் எத்தனை முட்டைகள் வரை சாப்பிட முடியும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் ஒரு நபர் 50 முட்டைகள் மற்றும் ஒரு பாட்டில் மதுவை சாப்பிட வேண்டும் என்றும் இதற்கு 2000 ருபாய் பந்தயமாக நிர்ணயித்துள்ளனர்.
இதை ஏற்றுக்கொண்ட சுபாஷ் 42வது முட்டையை சாப்பிடும் போது திடீரென மயக்கம் அடைந்தார்.
இதை பார்த்து பதறிப்போன நண்பர்கள் சுபாஷை தூக்கிக் கொண்டு லக்னோ மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.