உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பு

சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பரிசீலித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்பு குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2015 முதல் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில் ஆண்டுதோறும் அது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள மற்ற நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதோடு உயர் நீதிமன்றத்தில் உள்ள அவர்களின் பாதுகாப்பை நிரந்தரமாக்ககோரி மத்திய அரசு வழக்கறிஞர் ராஜகோபாலன் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார்.

அந்த வழக்கின் விசாரணையின் போது சிஐஎஸ்எப் பாதுகாப்பால் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் அறைக்கு வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணன் வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கான சிஐஎஸ்எப் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து தலைமை நீதிபதி மற்றும் சரவணன் அமர்வு உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே