சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்திய அளவில் மோட்டார் வாகன உற்பத்தியின் மையமாக சென்னை உள்ளது.
மோட்டார் வாகன உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தில் அமைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் குறித்து, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதற்காக சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் 28 ஏக்கர் நிலப்பரப்பில், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.