யார் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – செல்லூர் ராஜூ

சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரிசோதனை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை பாயும் என்றும் அதில் அரசு தலையிடாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டவனே தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை பாயும் என்றார்.

தனக்கும் பதவி ஆசை இருப்பதாக அதிமுக அமைச்சர் ஒருவர் பேசியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பதவிக்கு ஆசைப்படுவது தவறு இல்லை என்றும் வெறியாகத்தான் மாறக்கூடாது என்றும் பதில் அளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே