குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து உறுதியாகப் போராடிவரும் ஷாஹின்பாக், ஜாலியன்வாலா பாக் சம்பவத்தைப் போல மாறக்கூடும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அச்சம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் திருத்த சட்டத்தை எதிர்த்து பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த 50 நாட்களாக டெல்லியின் ஷாஹின் பாக் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஷாஹின்பாக் போராட்டத்தை கலைப்போம் என்று பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றத்திலும், நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அபாயங்களைப் பட்டியலிட்டு வரும் ஒவைசி,
- பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு பிறகு ஷாகின்பாக் காலி செய்யப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகிறது.
- துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம்.
- ஷாகின்பார்க் போராட்டம் ஜாலியன்வாலாபாக் சம்பவமாக மாறலாம்.
- அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
- மக்களைச் சுட்டுத்தள்ளுமாறு வெளிப்படையாகச் சொல்லும் பாஜக அமைச்சர்கள் சுதந்திரமாக உலவும் இந்தக் காலகட்டத்தில், எதுவும் நடக்கலாம்.
- 2024 வரை என்.ஆர்.சியை அமல்படுத்த மாட்டோம் என்னும் தெளிவான பதிலை அரசு தெரிவிக்க வேண்டும்.
- என்.பி.ஆருக்கு எதற்காக 3,900 கோடிகள் செலவிட வேண்டும்? வரலாற்று மாணவனாக கேட்கிறேன்.
- ஹிட்லர் இரண்டு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி யூதர்களை கொன்றொழித்தார்.
- அது என்னுடைய நாட்டிலும் நடப்பதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.