காளையார்கோவிலில் மருதுபாண்டியரின் 218 ஆவது குருபூஜை விழா

மருதுபாண்டியர் குருபூஜை விழாவுக்கு வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் சிவகங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே உள்ள காளையார்கோவிலில் மருதுபாண்டியரின் 218 ஆவது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

இதையடுத்து அமுமுக செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா உள்ளிட்டோர் மருதுபாண்டியருக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்க வந்த சிலர் சிவகங்கை தெப்பக்குளம் அருகே மருதுபாண்டியர் சிலை நிறுவ ஏற்பாடு செய்தனர்.

ஆனால் முன் அனுமதியின்றி சிலை வைக்க அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்ததால், அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டார்கள்.

இதையடுத்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தடியடி நடத்தினர்.

இந்த மோதலில் 5 போலீசார் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

இதன் எதிரொலியாக காளையார் கோவில் சாலை மறியலில் ஈடுபட்ட சிலர் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் 1650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே