சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை நடை திறந்து இரு நாட்களில் 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோயிலுக்கு வந்த நடுத்தர வயது பெண்கள் இருவர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் 45 வயதுக்குட்பட்ட 319 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.

தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் அதிக அளவில் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

இதனால் பல மணி நேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

பம்பையில் இருந்தே பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் காவல் துறையினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

நடை திறந்து இரண்டு நாட்களில் 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சபரிமலைக்கு வரும் பெண்களின் வயதை உறுதி செய்த பிறகு அவர்களை அனுமதிக்கும் பணியில் கேரள காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்புமுகாமில் இந்த பணிகள் நடத்தப்பட்டு உள்ளது.

சபரிமலைக்குச் செல்லும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என கேரள அரசு கூறிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே