தீப்பிடித்து எரிந்த பட்டாசுக் கடைகள்

தெலுங்கானாவின் கம்மத்தில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகள் தீப்பிடித்து எரிந்தன.

தீபாவளியையொட்டி அங்குள்ள கல்லூரி ஒன்றில் மைதானத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

விற்பனை மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு கடையில் தீ பிடித்து பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது.

அது அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதால் அப்பகுதியே பெரிய குண்டு வெடித்த பகுதி போல காட்சியளித்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே