தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்!

தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா, திருமந்திரம் பாடி தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா வருகிற 5ம் தேதி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 27 ஆம் தேதி அன்று பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு தினமும் ஒவ்வொரு பூஜை நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கொடிமரம் ஏற்றப்பட்டது.

அன்றைய நிகழ்வு சமஸ்கிருதத்தில் நடைபெற்றதால் தமிழர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓதுவார்கள் மூலம் திருமுறை பாடப்பட்டு நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உலக மக்களின் நன்மைக்காக திசா ஹோமம், சாந்தி ஹோமம் ஆகியவையும் நடத்தப்பட்டன. அங்கிருந்த கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டு, சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே