மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 102ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு தனது அஞ்சலிகளை செலுத்துவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
ராகுல் காந்தி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், இந்தியாவை வலுவான நாடாக கட்டமைக்க அரும்பாடுபட்ட இரும்பு பெண்மணி இந்திரா காந்திக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துவதாக கூறியிருக்கிறார்.