கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும்… மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது: யுஜிசி!!

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், பல்கலைக்கழக மானிய குழு வாதமிட்டுள்ளது.

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யப்போவதாக மாநிலங்கள் கூறுவது சரியான முடிவு அல்ல என உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது. மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாகி உள்ளோம் என தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள காரணத்தால் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் தவிர பிற செமஸ்டர் தேர்வுகளை யுஜிசி ரத்து செய்தது.

இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படாததற்கு மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. எனினும் இறுதியாண்டு தோ்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என யுஜிசி மீண்டும் அறிவுறுத்தியது.

யுஜிசியின் இந்த உத்தரவுக்கு எதிராக மாகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனையின் இளைஞா் அமைப்பான யுவசேனை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் யு.ஜி.சி சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அதில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யம் திட்டம் இல்லை என்றும், அனைத்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வேறு ஒரு தேதியில் எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, யுஜிசி தனது முடிவில் உறுதியாக இருப்பதாக வாதிட்டு வருகிறது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே