தேச துரோக வழக்கு குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து

தேசத்துரோக வழக்கு என்பது கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் என தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்த தமிழச்சி தங்கபாண்டியன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது நாட்டு குடிமக்களுக்கு பிரதமரிடம் கடிதம் எழுதி கருத்துக்களை கூற உரிமை உள்ளது என்றும், பிரதமர்-சீன அதிபர் சந்திப்பை இந்திய குடிமகனாக எண்ணி பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே