எம்எல்ஏ பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் – புகழேந்தி

அதிமுகவுக்கும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் முதல் சிப்பாய்களாக நின்று காப்போம் என்று அமமுக அதிருப்தியாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய புகழேந்தி, 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோக டிடிவி தினகரனே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

தான் மட்டுமே எம்எல்ஏ-வாக இருக்க வேண்டும் என தினகரன் நினைப்பதாக விமர்சித்த அவர், இனி தினகரனோடு சேர்ந்து பயணிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா, 3 ஆண்டுகளிலேயே வெளியே வர வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்ட புகழேந்தி, அதுவரை அதிமுகவுக்கும் கட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டால் முதல் சிப்பாய்களாக நின்று காப்பாற்றுவோம் என்று உறுதியளித்தார்.

இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரன் இழிவுபடுத்தி பேசுவதை மக்கள் விரும்பவில்லை என்றும், ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று புகழேந்தி வலியுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே