அமித்ஷாவுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால்..!!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பாஜக இரு தரப்பினரும் அனல் பறக்கும் வகையில் பரப்புரை செய்து வருகின்றனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான முழுவீச்சில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி களம் இறங்கியுள்ளார்.

மம்தாவை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது.

இதற்காக அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள இரு கட்சிகளும் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா டுடேவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், “மற்றவர்கள் போல் நான் எழுதிவைத்து பேட்டி கொடுப்பதில்லை.

தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித் ஷா போட்டியிடட்டும். ஒருவேளை அவர் வெற்றி பெற்றால், அவரை நான் அமைச்சர் ஆக்குகிறேன்” என்று சவால் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே