முரளிதரனின் சாதனையை, அஸ்வின் சமன் செய்துள்ளார்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையை இந்திய வீரர் அஸ்வின் சமன் செய்துள்ளார்.

இலங்கை வீரர் முத்தையா முரளிதரனும், இந்திய வீரர் அஸ்வினும் 66 போட்டிகளில் விளையாடி 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 106 இன்னிங்ஸிலும், அஸ்வின் 124 இன்னிங்ஸிலும் விளையாடி இருக்கின்றனர்.

அதிவேகமாக 350 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள முரளிதரன் 21632 பந்துகளையும், அஸ்வின் 18685 பந்துகளையும் வீசியுள்ளனர்.

முரளிதரன் 28 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள நிலையில், அஸ்வின் 27 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இருவரும் ஏழு முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர்.

முரளிதரன் ஒன்பது ஆண்டுகள் 9 நாட்களும், அஸ்வின் ஏழு ஆண்டுகள் 332 நாட்களும் பந்து வீசி உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே